பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
08:04
கிருஷ்ணகிரி: சிந்தகம்பள்ளியில் நடந்த யுகாதி பண்டிகையில், பக்தர்கள் மீது நடந்து கோவில் பூசாரி ஆசி வழங்கினார். ஆந்திர மாநில எல்லையில் உள்ள, கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி கிராமம் மாரியம்மன் கோவிலில், தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை கடந்த, 2ல் கொண்டாடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று அதிகாலை, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரித்த கரகத்தை பூசாரி ரவி எடுத்துச்சென்றார்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காளிக்கோயில் அருகிலிருந்து, முத்துமாரியம்மன் கோயில் வரை சாலையில் ஈரத்துணியுடன் படுத்து கொண்டனர். மீது கரகம் எடுத்து வந்த பூசாரி, அவர்கள் மீது நடந்து சென்று ஆசி வழங்கினார். பின், கோயில் எதிரில் அமைத்திருந்த குண்டத்தில், பூசாரி மற்றும் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, 500க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்கள் மற்றும் ஆந்தி மாநில பக்தர்களும் கலந்து கொண்டனர். இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கலர் பொடிகளை பூசியும், தலை மீது முட்டை உடைத்தும், விழாவை கொண்டாடினர்.