நத்தம் சேர்வீடு வேட்டைக்காரன் சாமி கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2022 11:04
நத்தம்: நத்தம் அருகே சேர்வீடு வேட்டைக்காரன் சாமி கோவில் திருவிழா நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று நத்தம் அவுட்டர் பகுதியிலிருந்து சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின் சாமிக்கு கண் திறக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் வேட்டைக்காரன் சாமி மற்றும் அதன் உப தெய்வங்கள், குதிரை, மதலை உள்ளிட்ட சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து சேர்வீடு சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சேர்வீடு கிராம மக்கள் செய்திருந்தனர்.