பதிவு செய்த நாள்
11
ஏப்
2022
01:04
பாலக்காடு: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருன்னாவாய அருகே உள்ளது புகழ்பெற்ற நாவா முகுந்த கோவில். இங்கு எல்லாம் ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு திருவிழா நேற்று முன்தினம் திரவ்ய கலச பூஜையுடன் துவங்கின. கல்புழா கிருஷ்ணன் நம்பூதிரியின் தலைமையில் இப்பூஜை நடந்தனர். தொடர்ந்து சங்கு நாகம், கூத்து விளக்குடன் வாத்திய மேளங்கள் முழங்க மூலவர் வீதியுலா ரும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து நவதானியங்களை கொண்டு சிறப்பாக தயாரித்த மூங்கிலறையில் முங்கிலிடல் நடந்தன. பிறகு பிரசாத சுத்தி, ரக்ஷோக்ன ஹோம், வாஸ்து ஹோம், அஸ்தர கலசபூஜை, வாஸ்து கலசபூஜை, வாஸ்து பலி, வாஸ்து கலசாபிஷேகம், அத்தாழபூஜை, குண்டசுத்தி, அத்தாழ சீவேலி ஆகியவை நடைபெற்றன. 14ம் தேதி பிரம்மகலச அபிஷேகத்துடன் திரவ்யகலச பூஜை நிறைவடையும். தொடர்ந்து மாலையில் ஆச்சாரியவரணத்துடன் திருவிழா கொடியேற்றம் நடக்கும். 23ம் தேதி மூலவருக்கு நடக்கும் ஆறாட்டுடன் திருவிழா நிறைவடைகின்றன.