Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஒரே நாளில்.. தமிழ் புத்தாண்டு, குரு ... சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம் சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படி பூஜை
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படி பூஜை

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
02:04

தஞ்சாவூர் : தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோவிலில் திருப்படி பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். முருகனின் அறுபடை வீடுகளில் 4-வது படைவீடாக திகழும் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில், தமிழ் வருட தேவதைகள், தங்களின் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து, சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்வது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

இக்கோவிலில், ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கு திருப்படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி,  தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், சுபகிருது ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அப்போது, இந்த ஆண்டில் மழை வளம் வேண்டியும், வறட்சி நீங்கி தானிய விளைச்சல் பெருகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு, அதிகாலை மூலவர் சுவாமிநாத சுவாமி நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைரவேல் அலங்காரம் நடைபெற்றது. இதில்,  பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar