திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பாண்டிய ராஜாவாக பங்கேற்ற சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுடன் பூப்பல்லக்கிலும், தாரைவார்த்துக் கொடுத்த பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்திலும் நேற்று திருப்பரங்குன்றம் கோயில் திரும்பினர்.
திருப்பரங்குன்றத்திலிருந்து ஏப்.13 ல் புறப்பட்டாகிய சுவாமிகள் மதுரை சுவாமிகளுடன் வீதி உலா சென்று அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் மாலையில் மதுரை சுவாமிகளிடம் திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்தது. நேற்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். பூப்பல்லாக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை முடிந்து சர்வ அலங்காரத்தில் மாலையில் பூப்பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை புறப்பாடாகி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து அம்மன் சன்னதியில் எழுந்தருளினர். மதுரை கோயிலில் எழுந்தருளி இருந்த பவளக்கனிவாய் பெருமாள் புறப்பாடாகி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.