பதிவு செய்த நாள்
18
ஏப்
2022
06:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் தண்டு மாரியம்மன் கோவிலில், 66ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா துவங்கியது.
இக்கோவிலில் கடந்த, 5ம் தேதி விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா நடந்தது. 12ம் தேதி பூகம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 17ம் தேதி முடிய தினசரி இரவு, 10:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தன. நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், தண்டுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை இரவு, 7:30 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 20ம் தேதி காலை, 6:00 மணிக்கு சக்தி கரகம் கோவில் வந்தடைதல், தொடர்ந்து அலங்கார பூஜை, பொங்கல், மாவிளக்கு, அக்னி கரகம், பூகம்பம் அகற்றுதல் நடக்கிறது. 21ம் தேதி மஞ்சள் நீர் விழாவும், 22ம் தேதி வசந்த பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கோவில் தர்மகர்த்தா ரங்கராஜ் மற்றும் தண்டுமாரியம்மன் ஆராதனை, வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டுள்ளன.