திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி ஸ்வாமிக்கு நேற்று முன்தினம் காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து, மாலை அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருத்துறைப்பூண்டி நகர பூக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடந்த ஸ்வாமி ஊர்வலம், மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஏற்பாட்டை கோவில் கணக்கர் ஐயப்பன் மற்றும் பூக்கடை உரிமையாளர்கள் செய்திருந்தனர்.