பதிவு செய்த நாள்
25
ஜூலை
2012
10:07
நகரி: நகரி தேசம்மாள் கோவிலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.சித்தூர் மாவட்டம், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகை கிராமத்தில், கண்ணொளி வழங்கும் சக்தி சுயம்புவாக எழுந்தருளியுள்ள தேசம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், முதல் 10 வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனுக்கு பொங்கலிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், சேவற் கோழிகளை பிரார்த்தனையாக செலுத்தியும் வழிபடுகின்றனர்.நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். கண்ணொளி பெறவும், கண் நோய்கள் தீரவும், பக்தர்களின் கண்களில் தீர்த்தம் தெளிக்கப்படும். பக்தர்கள் இத்தீர்த்தத்தை பெற்று, தங்கள் கண்களில் தெளித்துக் கொண்டு வழிபட்டனர்.