பதிவு செய்த நாள்
20
ஏப்
2022
10:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், மாலை, 5:00 மணிக்கு ேஹாமம், 5:30 மணிக்கு அபிேஷகம், மாலை, 6:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகப்பெருமானை வழிபாட்டனர்.
தெப்பக்குளம் ராஜகணபதி கோவில், திப்பம்பட்டி சிவசக்தி கோவில், கொண்டே கவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவில்களில், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சித்திரை மாத, முதல் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூஜையில், சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.