தென்காசி : குருக்கள்பட்டி சுடலைமாடசாமி கோயிலில் இன்று (25ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. குருக்கள்பட்டி சுடலைமாடசாமி கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து இன்று (25ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூரணாகுதி, தீபாராதனை நடக்கிறது. 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. முன்னதாக நேற்று இரவு பிரவேச பலி, வாஸ்து சாந்தி நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்துள்ளனர்.