காரைக்கால் மகா மாரியம்மன் கோவிலில் முளைப்பாலிகை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2022 03:04
காரைக்கால்,: காரைக்காலில் கடைத்தெரு மகா மாரியம்மன் கோவிலில் முளைப்பாலிகையை முன்னிட்டு பெண்கள் கும்மி அடித்து குலவை ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் கைலாச நாதர் சுவாமி நித்தியகல்யாணப் பெருமாளுக்கு சொந்தமான கடைத்தெரு மாரியம்மன் கோவிலில் 42ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு திருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது 14ம் தேதி அம்பாள் வீதியுலா,15ம் தேதி திருவிளக்குபூஜை,17ம் பால்குடம் ஊர்வலம் உள்ளிட்ட 11நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நேற்று பெண்கள் முளைப்பாலிகை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு சென்றடைந்தது. பின்னர் பெண்கள் கும்மி அடித்து குலவை வாசித்து பக்தி பரவசத்துடன் மாரியம்மனை தரிசனம் மேற்கொண்டனர்.பின்னர் நேற்று அதிகாலை கோவிலில் உள்ள முளைப்பாலிகையை பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஆற்றங்ரை உஜ்ஜயினி காளியம்மன் கோவில் காவேரி ஆற்றில் நேற்றிக்கடனை செலுத்தினர்.இரவு மாரியம்மனுக்கு வெண்ணெய்த்தாழி அங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.