சுப்ரமணிய சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2022 03:04
புதுச்சேரி:உருளையன்பேட்டை சஞ்சய் காந்தி நகரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. உருளையன்பேட்டை சஞ்சய் காந்தி நகரில் அமைந்துள்ள, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 6ம் தேதி நடந்தது. மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கி நடந்து வந்தது.இந்நிலையில், மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது.
விழாவில் மூலவருக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வேதபுரீஸ்வரர் கோவில் அரசு குருக்கள் உள்ளிட்டோர் பூஜைகளை செய்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீனு மோகன்தாஸ் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.