பதிவு செய்த நாள்
23
ஏப்
2022
04:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பொள்ளாச்சி, திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று காலை, 10:07 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை, 7:55 வரை தேய்பிறை அஷ்டமி என்பதால், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டில் வரும் முதல் தேய்பிறை அஷ்டமியையொட்டி, 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதேபோன்று, பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.