பதிவு செய்த நாள்
23
ஏப்
2022
04:04
உடுமலை: உடுமலையில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 5ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 20ம் தேதி ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்றுமுன் தினம் மாலை, 4:15 மணிக்கு, திருத்தேரோட்டம் துவக்கியது. தேர் நிலையிலிருந்து,‘‘ஓம் சக்தி; மகா சக்தி’’ கோஷம் முழங்க பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பழநி ரோடு, தளி ரோடு, தலைகொண்டம்மன் கோவில் வீதி, தங்கம்மாள் ஓடை ரோடு, பொள்ளாச்சி ரோடு வழியாக, தேர் மீண்டும் நிலைக்கு வந்தது. விழாவில், நேற்று காலை, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கே
ற்றனர். இன்று, காலை, கொடியிறக்கமும், மகாபிஷேகமும், பகலில் மஞ்சள் நீராட்டும், மாலையில் புஷ்பபல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.