பதிவு செய்த நாள்
24
ஏப்
2022 
02:04
 
 கோத்தகிரி: கோத்தகிரியில் நடந்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, கேரள ரத ஊர்வலம் சிறப்பாக நடந்தது.
கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இவ்விழாவின் 11 நான்காவது நாளான இன்று மறுநாடன் மலையாளி மக்கள் சார்பில், கேரளா ரத ஊர்வலம் நடந்தது. கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் துவங்கிய ஊர்வலத்தில், சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்க, முத்துக்கொடை ஏந்தி, தாலபொலி, பூகாவடி எடுத்து, பக்தர்கள் ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு நடனமாடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மேலும், பிரமாண்ட ஆஞ்சநேயர் உருவ சிலை வீதிஉலா வர, கடவுள்களின் வேடங்கள் அணிந்த கலைஞர்களின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.