முத்துமாரியம்மன் கோவில் திருவிழா : அலகு குத்தி பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2022 02:04
பந்தலூர்: பந்தலூர் இரும்புபாலம் முத்துமாரியம்மன் கோவில் 32ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 22 ம்தேதி அதிகாலை கணபதி ஹோமம், கொடியேற்றுதல், காப்பு கட்டுதலூடன் துவங்கியது. அன்று இரவு ஆற்றங்கரைக்கு சென்று குண்டியைத்தல் நிகழ்ச்சி நடந்தது. 23ஆம் தேதி அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா சக்தி காளியம்மன் ஆலயத்தில் இருந்து அக்னி சட்டி ,பால்குடம், காவடி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் 9 அடி மற்றும் 11 அடி நீள வேல்களை அலகு குத்தி பக்தியுடன் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. தாழத் தட்டுகளுடன், அம்மன் ரத ஊர்வலம் நடந்தது. இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மாவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜையும், மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.