ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் உள்ள மயூரநாதப் பெருமான், பாம்பன் சுவாமிகள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு நெய் விளக்கு ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.