பதிவு செய்த நாள்
26
ஜூலை
2012
11:07
தேவூர்: தெடாவூர் கூத்தாண்டவர் ஸ்வாமி கோவிலில், கடந்த 15ம் தேதி தேர்த் திருவிழா கோலகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்து வருகிறது. வரும் ஆக., 1ம் தேதி வரை கோவிலில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 31ம் தேதி, கோவிலில் பொங்கல் வைத்து, பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். மாவிளக்கு ஏந்தி பெண்கள் ஸ்வாமிக்கு படையலிடுகின்றனர். பின், அய்யனார் தேர் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.வரும் ஆக., 1ம் தேதி, வாணவேடிக்கை நிகழ்ச்சியும், ஆக., 2ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செய்கின்றனர். இரவு 1 மணிக்கு அரவான் கடை பலியிடுதல் நிகழ்ச்சியும், ஆக., 3ம் தேதி மஞ்சள் நீராடி ஸ்வாமி விடையாற்றல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, தெடாவூர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.