பதிவு செய்த நாள்
26
ஜூலை
2012
11:07
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கருடபஞ்சமி விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலம் துவங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், கோவில் முன் முடிவடைந்தது. தொடர்ந்து, லட்சுமி நாராயண பெருமாள், மகாலட்சுமி, பெரிய திருவடி கருடாழ்வார் ஆகிய ஸ்வாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிப்பட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கருடாத்ரி பக்தர்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.