தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்த பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 11:04
பொன்னேரி: சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில், பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள், தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொன்னேரி, கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 16ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. விழாவின், 11ம் நாளான நேற்று, தெப்ப உற்சவம் நடைபெற்றது.இரவு 9:30 மணிக்கு கரிகிருஷ்ண உற்சவ பெருமான், தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தினை, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.