சிவன் கோயில்களில் தேய்பிறை பிரதோஷ பூஜை: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 05:04
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் பவள நிறவல்லி அம்மன் கோயிலில் தேய்பிறை பிரதோஷ விழா நடந்தது. மூலவர் பூவேந்தியநாதர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. வெள்ளியம்பலம் கைலாய வாத்திய குழு சார்பில் கையிலை வாத்தியம் முழங்கப்பட்டது. ரிஷப வாகனத்தில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. பிரதோஷ பாடல்கள் பாடப்பட்டது ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.
* உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள சங்கரேஸ்வரருக்கு பிரதோஷ விழா நடந்தது. பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
* கீழக்கரை சொக்கநாதர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் உள் பிரகார வீதி உலாவும் நடந்தது.