பதிவு செய்த நாள்
27
ஜூலை
2012
10:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடிபிரம்மோத்சவ திருவிழா ஜூலை 25ல் காலை 10.30மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருமாள் தினந்தோறும் அன்னம், சிம்ம, சேஷ, அனுமார் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஆடிபிரம்மோத்சவத்தில் பெருமாள் அன்ன வாகனத்தில் மோகினி அலங்காரத்தில் வீதியுலா வந்தார். ஜூலை 28ல் கருடவாகனம், 30ம் தேதி மாலை 6மணிக்கு, பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடாகி, ஆண்டாள் மாலை மாற்றல் நிகழ்ச்சியும், ஆக., 2ல் காலை 9.30க்கு ஆடித்தேரோட்டமும், மறுநாள் கொடியிறக்கப்பட்டு, திருவிழா நிறைவடையும். விழாவையொட்டி கோயில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி பாபுஜி, டிரஸ்டிகள் தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன் ஆகியோர் செய்துள்ளனர்.