காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2012 10:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், உண்டியலில் பக்தர்கள் 24 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தியிருந்தனர். காமாட்சியம்மன் கோவிலில் இரண்டு உண்டியல்கள் உள்ளன. அவை, நேற்று முன்தினம், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் சுந்தரமூர்த்தி, தியாகராஜன், ஆகியோர் முன்னிலையில் திறந்து, எண்ணப்பட்டது. உண்டியலில், 24 லட்சம் ரூபாய் ரொக்கம், 190 கிராம் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.