அன்னூர்: கூளேகவுண்டன் புதூர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
பொகலூர் ஊராட்சி, கூளே கவுண்டன் புதூரில், விநாயகர், மாரியம்மன் திருக்கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் புதிதாக கோபுரங்கள் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி தீர்த்தக்குடம் எடுத்து வருதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் கன்னிமார் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு வேள்வி பூஜையும், கோபுரத்தில் விமான கலசம் நிறுவுதலும் நடந்தது. நேற்று காலை 7:15 மணிக்கு விமான கோபுரம், விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மூலவர்களுக்கு, மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது, சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.