அன்னூர்: கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோவில், திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில், 27ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 24ம் தேதி மந்தை முனியப்பன் பொங்கலுடன் துவங்கியது. கடந்த 27ம் தேதி கம்பம் நடுதலும், பூவோடு வைத்தலும் நடந்தது. 29ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் பொங்கல் வைத்தல், அலங்கார பூஜை, அணிக்கூடை எடுத்து வருதல் நடந்தது. நேற்று புற்றுக்கண் மாரியம்மன் திருக் கல்யாண உற்சவம், அலங்கார பூஜை, அலகு குத்தி ஊர்வலமாக வருதல், முளைப்பாரி எடுத்து வருதல் ஆகியவை நடந்தது. இரவு கம்பம் எடுத்து கங்கையில் விடும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.