போத்தனூர்: சுந்தராபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, சக்தி கரக ஊர்வலம் நடந்தது. முத்துமாரியம்மன கோவிலின், 38ம் ஆண்டு திருவிழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 26ல் கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல், கம்பம் போடுதல் நடந்தன. 29ல் திருவிளக்கு பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் இரவு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரகம், தீர்த்தக்குடம், பால்குடம், பூவோட்டுடன் ஊர்வலம் துவங்கி, மதியம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அக்னி அபிஷேகம் நடந்தது. மாலையில் பொங்கல். மாவிளக்கு வழிபாடு நடந்தன. திரளானோர் அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் ஒயிலாட்டம், வாணவேடிக்கை, முத்துமாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தன. இன்று காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நிறைவு நாளான நாளை காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர். இன்று காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நிறைவு நாளான நாளை காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.