சிவலோகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2022 06:05
காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீசிவகாமி அம்மன் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசிவகாமி அம்மன் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தான ஆலயத்தின் கும்பாபிஷேக முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது. பின்னர் யாகசாலையில் உள்ள புனித நீர் அடங்கிய கலசங்களுடன் மேளதாளங்கள் முழங்க கடங்களுடன் சிவாச்சிரியாக்கள் கோவிலை சுற்றி வந்து. வேத மந்திரம் முழங்க ஸ்ரீசிவலோகநாத சுவாமி, ஸ்ரீசிவகாமி அம்மன் மூலஸ்தான கோபுரத்திற்க்கும் மற்றும் இராஜ கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.பின்னர் ஸ்ரீசிவகாமி அம்மன் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமுருகன் எம்.எல்.ஏ. மற்றும் காங் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.