Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ... திருப்பதி ஏழுமலையானுக்கு லாரி நன்கொடை திருப்பதி ஏழுமலையானுக்கு லாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் அரசே முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் அரசே முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்

09 மே
2022
08:05

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்திருக்கும் கனகசபையில், பக்தர்களை அனுமதிப்பது குறித்து, தமிழக அரசு தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலுாரைச் சேர்ந்த எம்.என்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் ஏறி, சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், கனகசபையில் இருந்து பக்தர்கள், சுவாமியை தரிசிக்க அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரதசக்கர வர்த்தி இடம் பெற்ற, முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், கொரோனா கட்டுப்பாடுகளால், கனகசபை மீது ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதியில், தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து, எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.இருதரப்பு வாதங்களுக்கு பின், அரசின் விளக்கத்தை ஏற்கிறோம்; எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. கனகசபையில் இருந்து, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கும் விவகாரத்தில், அரசே உரிய முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அத்துடன் வழக்கை முடித்து வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 14ம் தேதி மாலை திறக்கப்பட்டது. திருப்பதி மாடலில் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; சங்கடஹர சதுர்த்தியொட்டி விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவிலில், சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சிவகங்கை; கொல்லங்குடி அருகேயுள்ள அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar