Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் பிரசாத ஸ்டால்; ரூ.21 லட்சத்துக்கு ஏலம் ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் பிரசாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபாலீஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு : களைகட்டிய ‛ கதக் நடனம்
எழுத்தின் அளவு:
கபாலீஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு  : களைகட்டிய ‛ கதக் நடனம்

பதிவு செய்த நாள்

11 மே
2022
01:05

கதக் என்பது வடமாநிலங்களில் உள்ள பாராம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும்.கதக் என்னும் பெயர் சமஸ்கிருத வார்த்தையான கதாவிலிருநு உருவானது. இதற்கு கதை என்று பொருள்.

கதக் நடனத்தின் கதை கிமு மூன்றாவது நுாற்றாண்டிலேயே தொடங்குகிறது, பின்னாளில் முகாலயர்களின் இறக்குமதியையும் உள்வாங்கிக் கொண்டது. கதைச் சொல்வதையே தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட ‛கதகாஸ் என்று அழைக்கப்பட்டவர்கள் இதிகாசங்கள் மற்றும் புராணங்களிலிருந்த கதைகளை நடனவடிவில் மாற்றிக் கொடுத்தனர்.கதைகளுக்கு உயிரூட்டுவதற்கு, இசைக் கருவிகள் மற்றும் வாய்ப்பாட்டு இசையும் சேர்ந்து கொள்ள ‛கதக் மெலும் மேலும் மெருகேறியது.இன்றைய ‛கதக் நடன வடிவம் தவறாது கோவில் மற்றும் கலாச்சார மேடைகளில் இடம்பெறுகிறது. ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் பனாரஸ் அரசவைகளில் இடம் பெற்ற கதக் நடனங்கள் இன்று நாடு முழுவதும் ஆடப்படுகிறது.சென்னையில் இந்த ‛கதக் நடனத்தை சொல்லிக்கொடுப்பதற்காகவே தேவநியா கதக் பள்ளி இயங்கிவருகிறது.

சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் நடந்து வந்த வசந்த உற்சவ விழாவின் நிறைவு நாளான்று இந்தப் பள்ளி மாணவயரின் ‛கதக் நடனம் இடம் பெற்றிருந்து.சரஸ்வதி கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரும்பாலும் பரத நாட்டியமே பார்த்து வந்த பார்வையாளர்களுக்கு இந்த கதக் நடனம் புதிய உற்சாகத்தை தந்தது.வடமாநில பாணியிலான உடை அணிந்து மெதுவாக கால்களால் தாளமிட ஆரம்பித்து பின் துணிகள் பறக்க வேகமெடுத்து அவர்கள் சுழன்று சுழன்று ஆடியதையும்,தோள்களையும் கால் பாதங்களையும் மட்டும் மின்னல் வேகத்தில் அசைத்ததையும், பல்வேறு பாவங்களை கண்களிலும் முகத்திலும் கொண்டுவந்து காட்டியதையும் பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தன்ர.சென்னையின் சூழலுக்கு ஏற்ப இயற்கையை வர்ணித்தும் பாரதியின் பாடல்களுக்கும் இவர்கள் ஆடிய நடனம் அற்புதமாக இருந்தது.மீண்டும் மீண்டும் பார்க்க துாண்டியது.
-எல்.முருகராஜ்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar