Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் பிரசாத ... சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் உருவம் பொறித்த செப்பு வில்லை : பழமையான நாணயம் என விற்பனை
எழுத்தின் அளவு:
ராமர் உருவம் பொறித்த செப்பு வில்லை : பழமையான நாணயம் என விற்பனை

பதிவு செய்த நாள்

11 மே
2022
01:05

வீரபாண்டி: ராமர் பட்டாபிஷேக கோலம் பொறிக்கப்பட்ட பழமையான செப்பு ‘வில்லை’களை சிலர் பழமையான நாணயம் என கூறி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து சேலம் பாராமகால் நாணய சங்க இயக்குனர் சுல்தான் கூறியதாவது: நாணயம் போன்ற வட்ட வடிவத்தில் தங்கம், வெள்ளி, செம்பு என பலவிதமான உலோகங்களில் ராமர் பட்டாபிஷேக கோல உருவம் பொறித்த வில்லைகளை புகழ்பெற்ற கோவில்களில், 100 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.

அது போன்ற ஒரு பழமையான செம்பு வில்லை கடந்த வாரம் மும்பையில் இருந்து நண்பர் மூலம் கிடைத்தது. 9.860 கிராம் எடை கொண்ட நாணயம் போன்ற தோற்றமளிக்கும் இந்த வில்லையில் முன்புறம் சிம்மாசனத்தில் ஸ்ரீராமர், சீதா தேவி,லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் அனுமன் அமர்ந்த நிலையில் பட்டாபிஷேக கோலம் பொறிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் ராமர், லட்சுமணர் கையில் வில் அம்புடன் கூடிய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது நாணயம் கிடையாது. நாணயம் என்றால் அதில் அது வெளியிட்ட ஆண்டு, வெளியிட்ட நாடு அல்லது மன்னரின் பெயர் இடம் பிடித்திருக்கும். 100 ஆண்டுகளுக்கு முன் வடமாநிலங்களுக்கு புனிதயாத்திரை செல்பவர்கள் அதன் நினைவாக ஸ்ரீராமரின் உருவம் பொறித்த தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளைகளில் செய்த வில்லைகளை வாங்கி வந்து பூஜையில் வைத்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கம் இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து வருகிறது. தற்போது நம் நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், வெளிநாட்டு தலைவர்கள் நம் நாட்டுக்கு வந்தால் தங்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தெரிந்து கொள்ள நாணயங்களை வழங்கி கவுரவிப்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் ஒரு சிலர் இது போன்ற ராமர் உருவம் பொறித்த வில்லைகளை பழமையான அரிய நாணயம் என கூறி, பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அது போன்ற நபர்களிடம் வில்லைகளை நாணயம் என வாங்கி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar