பதிவு செய்த நாள்
11
மே
2022
05:05
தேவதானப்பட்டி: சில்வார்பட்டியில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி முனையடுவார் நாயனார் கோயிலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலையில் விநாயகர், முருகன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், நடராஜர், மாணிக்கவாசகர்,, சிவகாமி அம்மாள், சண்டிகேஸ்வரர்,நால்வர்,தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், முகூர்த்த நேரத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியும் இதனைத்தொடர்ந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.