திருப்பதி : திருமலை ஏழுமலையானின் ஏப்ரல் மாத உண்டியல் வருவாய், 127 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் நடந்த பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியின் போது, செயல் அதிகாரி தர்மா ரெட்டி ஏப்ரல் மாதம் முழுவதும் கிடைத்த உண்டியல் வருவாய், தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை ஆகியவை அடங்கிய பட்டியலை வெளியிட்டார். அதன் விபரம்: ஏப்ரல் மாதம் முழுதும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் சமர்பித்த காணிக்கைகளை கணக்கிட்டதில், 127 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஏழுமலையானை ஏப்ரல் மாதத்தில், 20.64 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்; விற்பனை செய்யப்பட்ட லட்டுகளின் எண்ணிக்கை, 99.07 லட்சம்; தலைமுடி காணிக்கை சமர்பித்தவர்களின் எண்ணிக்கை, 9.91 லட்சம். இவ்வாறு அவர் கூறினார்.