சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. மே 3 ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தொடர்ந்து 11 நாட்கள் ஒவ்வொரு நாளும் அம்மன் , வெள்ளி சிங்க வாகனம், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம் , வேதாள வாகனம் , குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். அக்கினிசட்டி, கயர்குத்து, முடிகாணிக்கை , பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தேர் வடம் தொடுதல் நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.