பதிவு செய்த நாள்
15
மே
2022
01:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சேரன் நகரில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலின், 28ம் ஆண்டு கம்பம் திருவிழா, கடந்த, 10ம் தேதி கணபதி ஹோமம், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று இரவு கம்பம் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. 17ம் தேதி இரவு, 8:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து, அம்மன் சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அம்மன் அழைப்பில் பம்பை, உடுக்கை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 18ம் தேதி பொங்கல் வைத்தலும், 19ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 20ம் தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. கோவில் நிர்வாகிகள், விழா கமிட்டியினர், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.