பதிவு செய்த நாள்
18
மே
2022
04:05
செஞ்சி: வடவெட்டி ஆதிலிங்கேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. மேல்மலையனுார் அடுத்த வடவெட்டியில் மலைமீதுள்ள பழமையான கற்பகாம்பிகை உடனாகிய ஆதிலிங்கேசுவரர் கோவில் திருப்பணிகள் செய்து ஆதிலிங்கேசுவரர், கற்பகாம்பிகை, பால கணபதி, பால முருகன், நந்தியம் பெருமான், சண்டிகேஸ்வரர், நான் முகன், பைரவர், அண்ணாமலையாருக்கு மகா கும்பாபிஷேகம் நாளை (19ம் தேதி) நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு பிள்ளையார் வேள்வியும், மாலை 6.30 மணிக்கு முதல் கால வேள்வியும் நடந்தது. இன்று காலை 7 மணிக்க பசு வழிபாடும், 10 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வியும் நடக்க உள்ளது. நாளை காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காப்பு அணிவித்தலும், 8.30 மணிக்கு நான்காம் கால வேள்வியும், 10 மணிக்கு வேள்வி நிறைவும், 10.15 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும், 10.40 மணிக்கு விமானங்களுக்கும், 11 மணிக்கு மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை வடவெட்டி கிராம பொது மக்கள் மற்றும் சிவனடியார் திருக்கூட்டத்தினர் செய்துள்ளனர்.