அன்னூர்: செல்வநாயகி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று துவங்கியது.
பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகி அம்மன் கோவில் பழமையானது. இக்கோவிலில் பூச்சாட்டு, திருக்கல்யாணம் மற்றும் பொங்கல் விழா நேற்று சிறப்பு வழிபாடுடன் துவங்கியது. செல்வநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. வருகிற 21ம் தேதி விளாங்குறிச்சி, காடை குல மக்கள் சார்பில், கரியாம்பாளையம் பிரிவில் இருந்து கோவிலுக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி கோவில் வளாகத்தில் விளாங்குறிச்சி, ஜமாப் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.