செந்துறை: செந்துறை அருகே குடகிபட்டி ஊராட்சி மேற்குப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவில் முன்னதாக மே 4 கிராம தெய்வங்களுக்கு கணி வைத்தாள் மற்றும் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. மே 18 தொடர்ந்து தோரணம் கட்டுதல், முத்தாலம்மன் மின் அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் நகர்வலம் வந்து சாமி குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு, முளைப்பாரி, பால் குடம், தீச்சட்டி, குட்டி கழுகு மரம் ஏறுதல், படுகளம் போடுதல், பந்தய கழுகு மரம் ஏரி, பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து அம்மன் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் அம்மன் பூஞ்சோலை சொல்லுங்கள் நிகழ்ச்சியுடன் திரு விழா நிறைவடைந்தது. திருவிழாவுக்கான ஊர் பூசாரிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.