மதுரை, :திருமங்கலம் சொரிக்காம்பட்டி அருகே பெருமாள்பட்டி வயலில் 357 ஆண்டு பழமையான கல்வெட்டை வரலாற்று ஆர்வலர் அருண்சந்திரன் கண்டுபிடித்தார்.அதை மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி, மைய செயலாளரும் மூத்த கல்வெட்டு வல்லுனருமான சாந்தலிங்கம் படித்தனர்.திருமலை நாயக்கருக்கு பின் மதுரையை ஆட்சி செய்த சொக்கநாத நாயக்கர் தன் தாயார், திருமலை நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கர்களின் புண்ணியமாக, அவுசேகபண்டாரம் சார்பாக அறக்கட்டளை துவங்கினார். கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சொரிகாமன் பட்டி என்ற பெயர் மருவி சொரிக்காம்பட்டி ஆனது.இவ்வூரின்எல்லைகளாககருமாத்துார், கரடிகல், பொன்னமங்கலம், கிண்ணிமங்கலம் ஊர் பெயர்கள் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த தன்மத்துக்கு(தர்மம்) யாரேனும் கேடு விளைவித்தால் அவர்கள் கங்கை கரையில் காராம் பசுவையும், தங்கள் தாயாரையும் கொன்ற பாவத்தில் போவார் என பொறிக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.