மயில்ரங்கம் மாரியம்மன் கோவில் அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2022 05:05
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மயில்ரங்கம் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அக்னி சட்டி எடுத்தல் , அமராவதி ஆற்றங்கரையில் இருந்து மாரியம்மன் கோவில் வரை வாணவேடிக்கையுடன் நடந்தது.
அமராவதி ஆற்றங்கரையில் 85 அக்னிச்சட்டி பூ வளர்க்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 85 பேர் அக்னிச்சட்டி எடுதது வந்து கோவிலை வலம் வந்து மாரியம்மன் கோவில் வாசலில் வைக்கப்பட்டது. இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் அலகு குத்தி 22 அடி அழகு, காவடி அழகு, விமான அழகு, தேர் சங்கிலி அழகு குத்தியும், மஞ்சள் மற்றும் சேற்று வேடமணிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேண்டுதலை நிறைவேற்றினர்.. மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இரவு கம்பம் கலைத்து அமராவதி ஆற்றில் விடப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அபிஷேகம் நடைபெறும். ஐந்தாண்டுகளுக்கு பிறகு பூச்சாட்டு நடைபெற்றதால் இப்பகுதி கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கூட்டமாக கலந்து கொண்டனர்.