கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சி மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
விழாவில் முன்னதாக மே 6 கணவாய்கருப்பு சாமி கோவிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வந்து, சைனா கேட்டு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மே 20 கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், நையாண்டி மேளம், கரகாட்டம், வானவேடிக்கை, அம்மன் அலங்காரம் செய்து கோவில் கொண்டுவரப்பட்டது. நேற்று மே 21 மாவிளக்கு எடுத்தல், அக்னிச் சட்டி, பால்குடம், அம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். இன்று மே 22 மஞ்சள் நீராட்டம் மற்றும் அம்மன் கங்கை சென்றடைதல் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் மேட்டுப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.