பதிவு செய்த நாள்
23
மே
2022
11:05
கோவை: சிங்காநல்லுார் அருகே காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.
சிங்காநல்லுார் அருகே கள்ளிமடை காமாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் மாரியம்மன் திருவிழா கடந்த, 13ம் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த, 20ம் தேதி இரவு, 9:15 மணிக்கு, பச்சை பட்டு உடுத்திய காமாட்சி அம்மனுக்கும், வெண் பட்டு உடுத்திய ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. மறுநாள் காமாட்சி அம்மன் திருவீதி உலாவும், நேற்று மாரியம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர். நிறைவில், பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழா அடுத்து இரவு மதுரை வீரன் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.