ராமேஸ்வரத்தில் மகாருத்ர யாகம் : ஜெயேந்திரர் சுவாமிகள் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2022 11:05
ராமேஸ்வரம்: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யார் சுவாமிகள் ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரத்தில் மகாருத்ர ஜெப ஹோமம் நடந்தது.
காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஜெயந்தி விழா யொட்டி நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் மகாருத்ர ஜெப ஹோமம் துவக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் யாக குண்டத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க மகாருத்ர ஜெப ஹோமம் நடந்தது. இதில் ராமேஸ்வரம் காஞ்சி மடம் மேலாளர் ஆடிட்டர் சுந்தரம், நிர்வாகி சாச்சா, மகாருத்ர கமிட்டி நாராயணன், பா,ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், ராமேஸ்வரம் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி சரவணன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து ஜூன் முதல் ஒவ்வொரு மாதமும் பிற 11 ஜோதிர்லிங்க தலங்களில் மகாருத்ர ஜெப ஹோமம் நடக்க உள்ளது.