ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நீதிக்கல்லில் பக்தர்கள் மிளகாய் அரைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று, சிவசேனா கட்சியின் மாநில தலைவர் திருமுருக தினேஷ் தலைமையிலான கட்சியினர், மிளகாய் அரைத்து வழிபட்டனர்.கட்சியினர் கூறுகையில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு, அதிக அளவிலான மாடுகள் இறைச்சிக்காக அனுப்பப்படுகிறது. இதனால், மாடுகளின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்து, பால் வளம் குறைகிறது.மேலும், பசுக்களை தெய்வமாக வழிபடும் நிலையில், அவற்றை இறைச்சிக்காக கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இதை கண்டிக்க நுாதன முறையில் மிளகாய் அரைத்து வழிபாடு செய்யப்பட்டது. மேலும், மாடுகள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது, என்றனர்.