கமுதி: கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் காமாட்சி அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு 508 விளக்கு பூஜை நடந்தது.பின்பு அம்மனுக்கு பணத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.