திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2012 11:08
திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து, சர்வ அலங்காரமாகி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி , தெய்வானைக்கு அபிஷேகங்கள், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. கோயிலில் எழுந்தருளிய காவல் தெய்வமான கருப்பண சுவாமிக்கு சந்தன காப்பு சாத்துப்படியாகி அருள்பாலித்தார். சன்னதிதெருவில் எழுந்தருளிய சொக்கநாதர் கோயில், மலைக்குப்பின்புறமுள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் முடிந்து அருள்பாலித்தனர்.