புதுச்சேரி, முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில், வரும் 27ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. 18ம் தேதி அர்ச்சுனன்- திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம், 20ம் தேதி தீமிதி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் சங்கராபரணி ஆற்றில் அர்ச்சுனன் - திரவுபதி அம்மனுக்கு தெப்பல் உற்சவம் நடந்தது. வரும் 27ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.