Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அல்லிநகரத்தில் ஊர்கூடி பொங்கல் விழா வள்ளலார் வழியில் மூலிகை கஞ்சி விநியோகம் வள்ளலார் வழியில் மூலிகை கஞ்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுந்தரநாயகி அம்மனுக்கு ஓலைப் பெட்டியில் அசைவ விருந்து படைத்து பெண்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சவுந்தரநாயகி அம்மனுக்கு ஓலைப் பெட்டியில் அசைவ விருந்து படைத்து பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

26 மே
2022
08:05

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் சவுந்தரநாயகி அம்மனுக்கு 200க்கும் மேற்ப்பட்ட பெண்கள் ஓலைப் பெட்டியில் அசைவ படைகள் கொண்டு சென்று வினோத வழிபாடு செய்தனர்.

மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்ப்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை,கொடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை மற்றும் கறி,மீன்,கருவாடு,முட்டை போன்ற அசைவ உணவுகளை சமைத்து பாரம்பரியம் மாறாமல் ஓலைப் பொட்டியில் வைத்து விளக்கேற்றி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதன் பின்னர் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோயிலை சுற்றி வந்து அசைவ உணவுகளை படையல் வைத்து குலவையிட்டு வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்துஅழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar