பதிவு செய்த நாள்
26
மே
2022
08:05
திருப்புவனம்: திருப்புவனம் அருகே அல்லிநகரம் ராஜகாளியம்மன் கோயில் வாசலில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். ராஜகாளியம்மன் கோயிலில் வருடம்தோறும் வைகாசி மாத செவ்வாய் கிழமை கோயிலைச்சுற்றிலும் வெள்ளக்கரை, அல்லிநகரம், நயினார் பேட்டை, முத்துப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கிராமமக்கள் நோய், நொடி இன்றி வாழவும், திருமண வரம் மற்றும் குழந்தைபேறு வேண்டியும்பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம், இரு ஆண்டுகளாக கொரானோ பரவலால் விழா நடைபெறவில்லை. அல்லிநகரம் சூர்யபிரகாஷ் கூறுகையில் : 40 வருடங்களுக்கு மேல் பொங்கல் விழா நடந்து வருகிறது. மழை வேண்டியும், திருமண வரம், குழந்தை பேறு வேண்டியும் நடத்தப்படும் இந்த விழாவில் அனைவரும் ஒற்றுமையாக பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவோம், என்றார். அல்லிநகரத்தில் பொங்கல் விழா நிறைவு பெற்ற உடன் காற்றுடன் சேர்ந்து கன மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகபெய்தது குறிப்பிடத்தக்கது.