ஸ்ரீநகர்: அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை நிறைவடைந்தது. இவ்வாண்டு, 6.20 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.காஷ்மீர் மாநிலம் இமயமலையில், கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில், அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. இங்கு தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான பனிலிங்க தரிசன யாத்திரை, ஜூன் 25ம் தேதி துவங்கியது. மொத்தம் 39 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரையில், 6.20 லட்சம் பக்தர்கள் பங்கேற்று பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர். அதேநேரத்தில், சாலை விபத்து உட்பட பல்வேறு காரணங்களால், யாத்திரையின் போது 130 பக்தர்கள் உயிரிழந்தனர். "சாரி முபாரக் எனப்படும் சிவபெருமானின் சூலாயுதம் நேற்று அமர்நாத் குகைக் கோவிலை அடைந்து பூஜைகள் நடைபெற்றதை அடுத்து, யாத்திரை நிறைவு பெற்றது.