நியூசிலாந்தில் ரூ.25 கோடியில் உருவாகிறது சாய்பாபா கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2012 11:08
நியூசிலாந்து நாட்டின் ஹாக்லண்ட் நகரில், சாய்பாபா கோவில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் 13ம் தேதி, கோவில் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாக, நியூசிலாந்து சாய்பாபா சமஸ்தான் டிரஸ்ட் சேர்மன் பாஸ்கர ரெட்டி தெரிவித்தார். 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள கோவிலின் முழுப் பணிகளும், ஓராண்டு காலத்தில் முடிவடையும். கோவிலின் கருவறையில், ஐந்து அடி, ஐந்து அங்குலம் உயரத்தில் பளிங்குக் கல் சிலை அமைக்கப்பட உள்ளது. சீரடி சாய்பாபா கோவிலின் அமைப்புகளை பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்த பின் இத்தகவலை பாஸ்கரரெட்டி தெரிவித்தார்.